தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம்
களத்திற்கு வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தினை அறிவித்தார். அதன் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" சிறப்புத் திட்ட முகாமில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ. 75, 000 மதிப்பில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் 3 பயனாளிகளுக்கும், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் 7
பயனாளிகளுக்கும் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்கியராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.