*பராமரிப்பு காரணமாக நாளை சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட முன்பதிவில்லா ரயில் சேவை ரத்து*
ஈச்சங்காடு - மாத்தூர் ரெயில்வே பாதையில் பராமரிப்பு காரணமாக நாளை சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல விருதாசாலம் - திருச்சி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் உள்ளிட்ட 6 ரயில் சேவைகள் நாளை ஒரு நாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் தேஜஸ் விரைவு ரயில், வைகை விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் நாளை ஒரு நாள் மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.