காந்தி தன் உணவு முறை குறித்து ஒரு புத்தகத்தில், “100 கி முளைக்கட்டிய கோதுமை, பாதாம் 100 கி, கீரை 100 கி, எலுமிச்சை, தேன் ஆகியவற்றை காலை 11 மணிக்கு உணவாக எடுத்துக் கொள்வேன். அடுத்த வேளை உணவை மாலை 6:15 மணியளவில் சூடான நீர், எலுமிச்சை, தேனை எடுத்துக் கொள்வேன்" என எழுதியிருக்கிறார். 1911-ம் ஆண்டு முதல் உப்பு இல்லாத உணவை சாப்பிட தொடங்கிய அவர், மருத்துவரின் அறிவுரை காரணமாக 1920-ல் மீண்டும் உப்பு சேர்த்து சாப்பிட தொடங்கினார்.