பாபநாசம்தொகுதியில் ஆர். சுதா எம்பி நன்றிகூறி சுற்றுப்பயணம்

52பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் ஆர். சுதா பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 
பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு வருகை புரிந்தார். பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தலைமையில் கோ. தாமரைச்செல்வன் தலைமையில்
மருத்துவக்குடியில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டது. ஓலைப்பாடி, கொந்தகை, திருவைகாவூர், குரும்பூர்,   தியாகசமுத்திரம், கபிஸ்தலம, சறுக்கை  உள்ளிட்ட
பல்வேறு
நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு,   பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. ஆர். லோகநாதன்,
வட்டார காங்கிரஸ் தலைவர் நாகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் விஜயன், உட்பட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட ஒன்றிய கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி