கும்பகோணம் திருவிடைமருதூர் பகுதிகளில் என் ஐ. ஏ. சோதனை

55பார்த்தது
திருவிடைமருதூர் தாலுகா,
திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் என்ஐஏ அமைப்பினர் 25 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (45) அந்த பகுதியில் நடைபெற்று வந்த மதமாற்றங்களை தடுத்து வந்ததால், கடந்த 2019ம் ஆண்டு பிப். 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை திருவிடைமருதூர் போலீஸார் விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 18 பேர் குற்றவாளிகளாக கருதப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இருவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் 5 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக என்ஐஏ அறிவித்து, அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்நிலையில் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகப்படுபவர்களின் வீடுகள், தேடப்படும் குற்றவாளிகளின் வீடுகளில் இன்று என்ஐஏ சோதனை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி