திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பக்தர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கு, எவ்வித நிபந்தனையும் இல்லை. மதியம் 2 மணிக்கு பின், 70 முதல் 100 பேர் கொண்ட பக்தர்கள் கூட்டம், கூட்டமாக அனுமதிக்கப்படுவர். அவர்கள் இரவு 9.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதில், 12 வயதுக்கு உட்பட்டோருக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.