மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி ரேஷன் பொருட்கள் தகுதியானவர்களுக்கு சரியாக செல்கிறதா என்பதை உறுதி செய்ய e-KYC அப்டேட் செய்வது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. மார்ச் 31-க்குள் அப்டேட் செய்ய தவறினால் ரேஷன் அட்டைகள் ரத்தாகி அதன்மூலம் கிடைக்கும் சேவைகள் நிறுத்தப்படும். இதுவரையில் 70 லட்சம் பேர் இதை அப்டேட் செய்யவில்லை. தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு உறுதி திட்டத்தில் பலர் இலவசமாக ரேஷன் பொருட்களை பெறுகின்றனர்.