தினமும் 8 – 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் முதல் ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை கூறுகிறார்கள். அதை தாண்டி அதிகமாக குடித்தால் உடலில் இருக்கும் உப்பு சத்து குறைந்து குமட்டல், வாந்தி, தீவிரமான சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் உண்டாகும். மேலும் நமது சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தை உண்டாக்கும். சிறுநீர்ப்பை மற்றும் டெஸ்டிகுலர் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.