வைத்தீஸ்வரன் கோயில் பாதயாத்திரை துவக்க விழா.

79பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் இருந்து அடஞ்சூர் சுற்றுவட்டார வைத்தீஸ்வரன் வழிபாட்டு சங்கத்தினர் 17ஆம் ஆண்டு பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.  

200க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து, காப்பு கட்டிக் கொண்டு குருநாதர் சுந்தர. சிங்காரவேலு விருதுள்ளார் தலைமையில் பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.  

விருத்த பாடலுடன் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வீரசிங்கம்பேட்டை, திருவலஞ்சுழி, திருவிடைமருதூர், மூவாளூர், திரு நன்றியூர் வழியாக வைத்தீஸ்வரன் கோயிலை  22ம் தேதி சென்றடைந்து நிறைவு செய்கின்றனர்.  

பாதயாத்திரை துவக்க விழாவில் விராலிமலை அருணகிரிநாதர் விழா குழு துணை தலைவர் தனபால், வழக்குரைஞர்  ஜெயக்குமார், பன்னிரு திருமுறை மன்ற செயலர் சீனிவாசன், ஐயப்ப குருசாமிகள் பூவழகன், வரதராஜ்,   கோவில்பத்து தங்கமணி, திருச்சினம் பூண்டி அன்பழகன் உள்ளிட்டோர் வாழ்த்தி வழியனுப்பினர். ஏற்பாடுகளை பாதயாத்திரை குழு சிறப்பு தலைவர் மகாராஜபுரம் ராஜவேலு பாண்டுரார், தலைவர் இராசு, பொதுச் செயலர் செல்வகுமார் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி