ரம்யா சத்தியநாதன் செகண்டரி பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்

63பார்த்தது
ரம்யா சத்தியநாதன் செகண்டரி பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்
வல்லம் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் 2024  ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.  

நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர்  சத்தியநாதன்  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தார். குழுமத்தின் செயலாளர் ஜெனட் ரம்யா  முன்னிலை வகித்தார். அது சமயம் , மாணவ மாணவியர்கள் விளையாட்டு மூலமாக தங்களுடைய உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.   

நிகழ்ச்சியில் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் குமரன் , துணை முதல்வர் மோகன் ரம்யா சத்தி

யநாதன் கல்வியியல் கல்லூரியின் முதல்வர்  அறிவுமணி, துணை முதல்வர் கருப்பையா  மற்றும் ரம்யா சத்தியநாதன் இண்டஸ்ட்ரியல் கேட்டரிங் பள்ளியின் முதல்வர்  த பிரகாசம் ஆகியோர்  கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி