ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். "முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கட்சியின் தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.