ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகாரோ-ராம்கர் தேசிய நெடுஞ்சாலையில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை அதிவேகமாக சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 8 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.