காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) இன்று நுரையீரல் தொற்று காரணமாக காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். “தைரியமான கொள்கை பிடிப்பு கொண்டவர் எனவும், தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி நடந்தவர்” என்றார்.