வயலில் டிராக்டர் மோதி மூதாட்டி உயிரிழப்பு.

78பார்த்தது
வயலில் டிராக்டர் மோதி மூதாட்டி உயிரிழப்பு.
திருக்காட்டுப்பள்ளி அருகே வயலில் டிராக்டர் மோதி மூதாட்டி உயிரிழப்பு.
திருக்காட்டுப்பள்ளி அருகே கூட நாணலில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது டிராக்டர் மோதி சிகிச்சையில் இருந்த மூதாட்டி உயிரிழந்தார்.

திருக்காட்டுப்பள்ளி அருகே கூடநாணல் வடிவேல் என்பவரின் வயலில் வெள்ளிக்கிழமை  புது ஆற்காடு ரத்தினம் மனைவி சுசிலா (60) என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இவர் வாய் பேச முடியாதவர். அப்போது வயலில் இயக்கப்பட்ட  டிராக்டர் சுசீலா மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவே உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் சூசைமாணிக்கம் திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார் வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி