தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பில்லமரத்து தெருவில் வசிப்பவர் நாகராஜ் மனைவி ஆனந்த் லட்சுமி (50). உறவினர் நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் ஊருக்கு சென்றவர் ஜூலை 24 இல் வீட்டுக்கு வந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த தங்க வளையல், மோதிரம் மற்றும் ரூ. 8 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார். ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றார்.