காவிரியை பாதுகாக்க வலியுறுத்தி வழிபாடு

79பார்த்தது
காவிரியை பாதுகாக்க வலியுறுத்தி வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறை அடுத்த
மேலபுனவாசல் கொள்ளிடக் கரையில், காவிரியை பாதுகாக்க வலியுறுத்தி இயற்கை வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசீவகத்தமிழ்ச்சித்தர் கண்ணன் அடிகளார் தலைமை வகித்தார். சித்தர் மையங்களின் உலகளாவியத் தலைவர் கோவை சரவணன், அகில இந்தியத் தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரியை பாதுகாக்க வேண்டும், மாசுபடுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும், விவசாயம் செழிக்க வேண்டும், நாடு செழிக்க வேண்டும் என்று கோபூஜை, நதி பூஜை நடத்தப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் பொரி, மலர் தூவி, பால் தெளித்து, புனித நீர் ஊற்றி தீபாராதனைகளுடன் இயற்கை வழிபாடு நடைபெற்றது. தஞ்சை செழியன், மாவட்ட தலைவர் ராகவ் மகேஷ், தமிழக இளைஞரணி தலைவர் கமல்ராஜ், ஆலோசகர் ராஜேந்திரன், திருவையாறு நடராஜ கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்தியப் பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலப்புனவாசல் கிராமத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி