தூத்துக்குடி திருப்பதிக்கு புதிதாக விரைவு ரயில் இயக்கப்படுமா

63பார்த்தது
தூத்துக்குடி திருப்பதிக்கு புதிதாக விரைவு ரயில் இயக்கப்படுமா
மத்திய ரயில்வே
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அன்பரசன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரயில் பயன சலுகை கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அதை மீண்டும் வழங்க வேண்டும். மன்னார்குடி - பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை - தஞ்சை தஞ்சை - அரியலூர், கும்பகோணம் - விருத்தாசலம் ஆகிய பகுதிக்கு புதிய வழித்தடம் அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கி நிலம் கையகப்படுத்தும் பணியை உடன் தொடங்க வேண்டும். பூதலூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சையில் இருந்து தாத்துக்குடி, திருப்பதி மற்றும் திருவனந்தபுரத்துக்கு புதிதாக விரைவு ரயில் இயக்க வேண்டும் மீட்டர்கேஜ் இருந்தபோது தஞ்சை வழியாக
இயங்கி அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.
காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக ஏற்கனவே இயங்கிய கம்பன் விரைவு ரயிலை மீண்டும் காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை - திருவாரூர் வழியாக சென்னை வரை இயக்க வேண்டும் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை டெமு ரயில் ஒன்று இயக்க வேண்டும் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி