மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மாட்டு வண்டியில் மணல் எடுத்து பிழைப்பு நடத்திட, தஞ்சை மாவட்டம் முள்ளங்குடி, நடுப்படுகை, மருவூர், திருச்சென்னம்பூண்டி மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள், தஞ்சாவூர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு சிஐடியு மாநில செயலாளர்
சி. ஜெயபால் தலைமை வகித்தார். காத்திருப்பு போராட்டத்தில் முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி. என். பேர்நீதி ஆழ்வார், மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் திருவிடைமருதூர்
எம். கோவிந்தராஜ், பாபநாசம் கரிகாலன், சுதாகர், பூதலூர் ரமேஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, அழைப்பின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் தலைமையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அரசின் உத்தரவு பெற்று மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அப்போது நீர்வள ஆதாரத்துறை எஸ். டி. ஓ முருகையன், ராஜா மற்றும் மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.