தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோயில் பூசாரி மனு

59பார்த்தது
தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோயில் பூசாரி மனு
தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்த ராம்குமார் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்திடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியதா வது. நான் எங்கள் தெருவில் உள்ள படைவெட்டி அம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறேன். எங்கள் தெருவை சேர்ந்த கணேசன் மகன்கள் விஜி சுரேஷ் மற்றும் தயா இவர்களுடன் இன்னும் சிலர் கோயில் வளாகத்தில் கஞ்சா மற்றும் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை நான் கோயில் பூசாரி என்ற முறையில் பல முறை கண்டித்து வந்திருக்கின்றேன். இவர்கள் கஞ்சா மற்றும் அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக விற்பதை தொழிலாக செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் மீது காவல் நிலையத்தில் கஞ்சா, மதுபானம் விற்றல், அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களின் இன்னொரு சகோதரரான ஆனந்த் என்பவர் கஞ்சா வழக்கில் சிறையில் உள்ளார். இவர்கள் கடந்த 24ம் தேதி இரவு நான் வீட்டில் இருந்தபோது என்னை வந்து தாக்கினார்கள். நான் அதிக காயத்துடன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இந்த நிலையில் நான் கீழவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். இந்த நிலையில் புகாரை வாபஸ் வாங்க கோரி விஜி மற்றும் சுரேஷ் என்னை மிரட்டுகின்றனர். எனவே காவல் கண்காணிப்பாளர் இது குறித்து தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி