பொது அறிவு கேள்விகளுக்கு பதில் தஞ்சாவூரில் சிறுமி அசத்தல்

82பார்த்தது
பொது அறிவு கேள்விகளுக்கு பதில் தஞ்சாவூரில் சிறுமி அசத்தல்
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உமா மகேஸ்வரி தம்பதி யின் மகள் ரிதன்யா (4) பெங்களூர் தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கிறார். பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளிக்க ரிதன்யாவுக்கு பெற்றோர் பயிற்சி அளித்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில், நடந்த நிகழ்ச்சியில் 6 நிமிடங்களில் 100 பொது அறிவு கேள்விகளுக்கு ரிதன்யா பதில் அளித்து,   லிங்கன் புக் ஆப்  ரெக்கார்டில் உலக சாதனை  படைத்தார். இதற்காக சிறுமி ரிதன்யாவுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி, மேயர் சண் ராமநாதன் பாராட்டினார். இதேபோல் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் ராஜ்குமார் சங்கீதா தம்பதியின் மகள் டனுஷ் ஸ்ரீசிவன்யா (3) 400 வார்த்தைகளுக்கு உரிய விளக்கத்தை 9 நிமிடத்தில் கூறி, பாராட்டுப் பெற்றார். இந்த சிறுமியும் லிங்கன் புக் ஆப் ரெக்கார்டில் உலக சாதனை பதிவு செய்துள்ளார். மேலும் ஜனவரி 3ம் தேதி கலாம் புக் ஆப் ரெக்கார்டில் இந்த சாதனை பதிவை அவர் செய்ய இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் ராஜகிரியை சேர்ந்த தாமோதரன் கலையரசி தம்பதியின் மகன் 4ம் வகுப்பு படிக்கும் தேவேந்திரன் (8) தொடர்ந்து 30 நிமிடம் நடனம் ஆடி அசத்தினார். அவருக்கும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனர் ஜோசப் இளந்தென்றல். சிறப்பு விருந்தினர் கிறிஸ்டோபர் ஜோசா கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி