தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

62பார்த்தது
தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகக் கல்வியின் வழியாக இளங்கல்வியியல், கல்வியியல் நிறைஞர், முதுநிலை தமிழ், வரலாறு, நாடகம், இசை, சிற்பம், முது அறிவியல் (கணிப் பொறி, சுற்றுச்சூழல் அறிவியல்), ஒருங்கிணைந்த முதுநிலை தமிழ், வரலாறு, நாடகம், முனைவர் பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்பு ஆகிய பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் பருவத் தேர்வுகள் டிச. 11-ம் தேதி முதல் டிச. 22-ம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து, விடைத் தாள்கள் திருத்தும் பணிகள் குறைந்த நாட்களில் முடிக்கப் பட்டு, தேர்வு முடிவுகள் டிச. 29-ம் தேதி பல்கலைக்கழக இணைய தளம் வாயிலாக வெளியிடப் பட்டுள்ளன என பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பெ. இளையாப் பிள்ளை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி