தஞ்சாவூர்: யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்

60பார்த்தது
தஞ்சாவூர்: யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்
மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே அமைப்பார் என்ற யுஜிசி அறிக்கையை ரத்து செய்யக் கோரி, தஞ்சாவூர் சரபோஜி அரசுக் கல்லூரியில், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமையில், மாணவர்கள் சிறிது நேரம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கிளைச் செயலாளர் பிரேம்குமார், கிளைத்தலைவர் ரஞ்சித், கிளை நிர்வாகிகள் ஜெனிஃபர், சுமித்ரா, ஷாலினி, சரோஜினி, வசந்த், வீரராஜா, திலீப், அஸ்வின், மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யுஜிசி அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி