பெங்களூரு: பீன்யா பகுதியில் காவலர் ஒருவர் மனைவி, மகள் மற்றும் உறவினரின் மகள் என 3 பெண்களின் தலையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்கா ராஜு 42 தனது மனைவி பாக்யா வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக சந்தேகித்துள்ளார். இதையடுத்து, கங்காராஜு பாக்யாவின் தலையை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். மேலும், தடுக்க வந்த தனது மகள் நவ்யா (19) மற்றும் பாக்யாவின் அக்கா மகள் ஹேமாவதி (22) ஆகியோரையும் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார்.