திண்டுக்கல் மாவட்ட அரசுக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியர்கள் சிலர் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. அதில், நோயாளிக்கு கட்டுப் போட்டுவிட்ட மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர், நோயாளிகளிடம் பணம் வாங்குவதுபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.