புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

68பார்த்தது
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
புலம் பெயர்ந்த வட மாநிலத் தொழிலாளர்களுக்காக தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் இரவு நேர சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

50-வது வார்டில் வணிக வளாகம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்களுக்கு, யானைக்கால் நோய், மலேரியா நோய் கண்டறிவதற்கான சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாநகர் நல அலுவலர் வீ. சி. சுபாஷ் காந்தி தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். பிஹார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றி வரும் கட்டுமானத் தொழிலாளர்கள் 64 பேருக்கு, ரத்த பரிசோதனை, மலேரியா ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, ஜூன் 14-ம் தேதி தெற்கு வீதியிலும், ஜூன் 21-ம் தேதி அருளானந்த நகரிலும், ஜூன் 28-ம் தேதி கரந்தை பகுதியிலும் இரவு நேர சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி