சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்

80பார்த்தது
சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்
தஞ்சாவூரில் ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரயில் நிலைய முன்வாசலில் அலங்கார நுழைவாயில் கட்டும் பணி, தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது பயன்படுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு சாலையில் சிதறி கிடக்கின்றன. பணிகள் நிறைவடைந்த பின்பும் சாலையில் இந்த கற்கள் அகற்றப்படாமல் கிடைக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோர் தடுமாறி விழுந்து காயப்படுகின்றனர். எனவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் கொட்டி கிடக்கும் ஜல்லிக்கற்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி