போலியோ எனப்படும் இளம் பிள்ளை வாத நோயைத் தடுக்க, பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஆண்டு தோறும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.
இதன் பயனாக, போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததால், கடந்த 4 ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு பொது சுகா தாரத்துறை மூலம் தமிழகம் முழுவதும் மார்ச் 3 அன்று காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை 43 ஆயிரத்து 51 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.