தஞ்சாவூர் 'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் இந்திய தத்துவவியலாளர் நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சம்ஸ்கிருத துறைத் தலைவர் ஆர். சேஷாத்ரி 'வசு தைவ குடும்பம்' என்ற தலைப்பிலும், சாஸ்திராவின் சம்ஸ்கிருத துறையின் வருகை தரு பேராசிரியர் ஜி. ஆச்சார்யா ஸ்ரீ மத்வாச்சாரியாரின் தத்துவப் பங்களிப்புகள் என்ற தலைப்பிலும், சென்னைப் பல்கலைக்கழக சம்ஸ்கிருத துறைத் தலைவர் (ஓய்வு) பி. நரசிம்மன் 'சமகால சமூகத்தில் ஸ்ரீமத் ராமானுஜாச்சாரியாரின் தத்துவ மரபுகளின் பொருத்தம் என்ற தலைப்பிலும், சாஸ்த்ராவின் சம்ஸ்கிருத துறைப் பேராசிரியர் எஸ். வேணுகோபாலன் 'பிரபஞ்சத்தின் ஆன்மிக ஒருங்கிணைப்புக்கான ஸ்ரீ ஆதி சங்கரரின் யோசனைகள்' என்ற தலைப்புகளிலும் உரையாற்றினர்.
தொடக்க அமர்வில், கலை, அறிவியல், மானுடவியல் மற்றும் கல்வியியல் துறையின் புல முதன்மையர் கே. உமாமகேஸ்வரி வாழ்த்துரையாற்றினார்.
முனைவர்கள் எஸ். தியாகராஜன் ஆர். ஜெயஸ்ரீ மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.