மேட்டூர் அணையிலிருந்து
திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடலில் கலந்து விடாமல், நீர்நிலைகளில் சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம்
அவர் மேலும் கூறியதாவது: தமிழக அரசு மின் கட்டண
உயர்வை திரும்ப பெற வேண்டும். மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கீடு செய்ய வேண்டும். மேட்டூர் அணை திறப்பால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை தர முன்வராத நிலையில், இயற்கையாக மழை அதிகம் பெய்துள்ளதால் தண்ணீரை தேக்கிவைக்க முடியாமல் தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். எனவே, இந்தத் தண்ணீர் கடலில் கலப்பதை தடுத்து, பாசனத்துக்கு பயன்படும் வகையில் நீர்நிலைகளில் சேமிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன்களை உடனே வழங்க வேண்டும் என்றார்.
கட்சியின் மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.