தஞ்சை வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு அருகே நேற்று(அக்.24) பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டுவதாக தஞ்சை மேற்கு போலீசிற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேசியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மேல விதியை சேர்ந்த தங்கமணி மகன் கணேசமூர்த்தி (வயது 28) பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் கத்தியை காட்டி மிரட்டியது தெரியவந்தது. இதேபோல் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில் கீழவாசல் டவுன் கரம்பயை சேர்ந்த குமரன் (35) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.