ஆற்றுமணல் கடத்தல் 2 பேர் கைது

76பார்த்தது
ஆற்றுமணல் கடத்தல் 2 பேர் கைது
தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை வாய்க்கால் பகுதியில் ஆற்று மணல் கடத்தி வந்த மினி லாரியை போலீசார் பறி முதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூரில் அருகே சூரக்கோட்டை வாய்க்கால் பகுதியில் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த மினி லாரியை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அதில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக பாபநாசம் அருகே குமுளக்குடி பகுதியை சேர்ந்த அருண்மொழி (32), மாரியம்மன் கோயில் பகுதி கீழகளக்குடியை சேர்ந்த விஜி (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மாரியம்மன் கோயில் கீழகளக்குடியைச் சேர்ந்த அருண், அசோக் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி