தஞ்சை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு 13617 பேர் எழுதவில்லை

84பார்த்தது
தஞ்சை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு 13617 பேர் எழுதவில்லை
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப் -4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று 223 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அதன்படி மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரிகளில்  தேர்வு நடைபெற்றதை  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 223 தேர்வு மையங்களில் மொத்தம் 65, 521 விண்ணப்பித்தவர்களில் 51, 904  பேர்  தேர்வு எழுதினா். 13, 617  தேர்வு  எழுத வரவில்லை.
தஞ்சாவூர் வீரராகவா மேல்நிலைப் பள்ளி மையத்தில் காலை 9 மணிக்குள் வந்த தேர்வர்களை கண்காணிப்பார்கள் உள்ளே விட்டனர். அப்போது 15-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தேர்வர்கள் காலை 9. 10 மணிக்கு வந்தனர். ஆனால் அவர்களை கண்காணிப்பாளர்கள் உள்ளே விட அனுமதிக்கவில்லை. நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். எனவே மையத்துக்குள் உங்களை அனுமதிக்க முடியாது என்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள், நாங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வருகிறோம். மையத்தை கண்டுபிடிக்க முடியாததால் சிறிது தாமதமாகி விட்டது. எனவே எங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
 ஆனால் அனுமதிக்க முடியாது என கண்காணிப்பாளர்கள் திட்டவட்டமாக கூறினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சோகத்துடன் திரும்பி சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி