திருவாரூர்- காரைக்குடி ரயிலை மதுரை வரை இயக்க வேண்டும்

78பார்த்தது
திருவாரூர்- காரைக்குடி ரயிலை மதுரை வரை இயக்க வேண்டும்
திருவாரூர்- காரைக்குடி ரயிலை மதுரை வரை இயக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ரயில் உப யோகிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். நாகராஜன், மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: திருவாரூர்- காரைக்குடி ரயில் திருவாரூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி வழியாக காலை 9 மணிக்கு காரைக்குடி சென்றடைகிறது. மீண்டும் மாலை 6 மணிக்கு காரைக்குடியில் இருந்து அதே வழித்தடத்தில் திருவாரூருக்கு இரவு 9 மணிக்கு சென்றடைகிறது.
இடைப்பட்ட நேரத்தில் காரைக்குடியில் ரயில் நிற்பதற்கு பதிலாக, 120 கி. மீ தொலைவில் உள்ள மதுரைக்கு இந்த ரயிலை
இயக்க வேண்டும். இதனால், மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ஊர் மக்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பயனடைவர். மேலும், திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் இருந்து மதுரை செல்ல இந்த வழித்தடத்தில் வேறு ரயிலோ, பேருந்தோ இயக்கப்படுவதில்லை. எனவே, திருவாரூர்- காரைக்குடி ரயிலை மதுரை வரை இயக்க திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி