மூதாட்டிக்கு பாதிப்பு, ஓடோடிச் சென்று உதவிய எம்எல்ஏ

66பார்த்தது
பெருமகளூர் சந்தைப்பேட்டை பகுதியில்
வசித்து வருபவர் நீலா (வயது 65). இவரது கணவர் வடுகநாதன் ஏற்கனவே இறந்து விட்டார். மூதாட்டி நீலா, மனநலன் பாதிக்கப்பட்ட அவரது தங்கையுடன் தனியாக கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது குடிசை வீடு மின் கசிவு காரணமாக இரு தினங்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார்

பாதிக்கப்பட்ட மூதாட்டி நீலாவை சந்தித்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார்.  


அப்போது திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல் மஜீத், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை. ரவிச்சந்திரன், பெருமகளூர் நகர செயலாளர் மாரிமுத்து, பேரூராட்சி தலைவர் சுந்தரத்தமிழ் ஜெயப்பிரகாஷ், மாவட்டப் பிரதிநிதி கே. சீனிவாசன், ராஜேந்திரன், என். போத்தியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி