விசா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா

69பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்தில் செயல்பட்டு வரும் விசா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா  கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சாலியமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி மீனாட்சி சுந்தரேஸ்வரி தலைமை வகித்தார். முன்னதாக அறக்கட்டளை நிர்வாகி சுசிலா சீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிகளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்லின் வான்மதி குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார்.
விழாவில் மகளிர்களுக்கு கோலப்போட்டி,   பேச்சுப்போட்டி, மாறுவேட போன்ற போட்டிகளும்,  
கலை நிகழ்ச்சிகளும்  நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சிவக்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கி
சிறப்புரையாற்றினார்.
கால்நடை  ஆய்வாளர் சிவசக்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர்
செந்தில்குமார், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்க தலைவர் தேவராஜன், செயலாளர் தங்க. கண்ணதாசன், நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சிகளில் மகளிர் குழு நிர்வாகிகள், களப்பணியாளர்கள்,
உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக களப்பணியாளர் சண்முகப்பிரியா நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி