நெல்லை மாவட்டம் சிந்துப்பூந்துறையைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேசன். இவர் மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து, நெல்லை மாநகராட்சியில் ஏழைகளின் மருத்துவராக திகழ்ந்துள்ளார். சிறிய கிளினிக் நடத்தி வந்த இவர், ஒரு ரூபாய் கட்டணத்தில் தனது மருத்துவ சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வந்தார். பின்னர் இறுதியாக 80 ரூபாய்க்கு நோயாளிகளுக்கு மருந்தும் மாத்திரையும் வழங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவர் கணேசன் நேற்று (ஆகஸ்ட் 18) இரவு உயிரிழந்தார்.