மார்க்கண்டேயன் உயிரை எமன் பறிக்க முற்பட்டபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை பற்றி வேண்டிக் கொண்டிருந்தார். அப்போது பாசக் கயிறு சிவன் மீதும் விழுந்தது. தன்மீது பாசக்கயிற்றை வீசிய எமனை காலால் உதைத்து சிவன் அழித்தார். எமனை அழித்த ஈசன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கால சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். எமபயம், மரண பயம் இருப்பவர்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று கால சம்ஹார மூர்த்தியை வழிபாடு செய்வது பயத்தை போக்கும்.