ரேஷன் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்த தனிநபர்கள்...

58பார்த்தது
ரேஷன் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்த தனிநபர்கள்...
பேராவூரணி அருகே உள்ள மேல மணக்காடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேல மணக்காடு ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் சுமார் 50 செண்ட்  உள்ளது. கடந்த செப். 13 ஆம் தேதியன்று இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வெளியூர்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும், அந்த இடத்தில் பெரிய அளவில் தகர செட் போட்டு, இரும்பு கதவும் அமைத்துள்ளார்.  
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இதுகுறித்து காவல்துறையினர், வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் கருப்பையா, கிளைச் செயலாளர் பாலச்சந்தர், பொதுமக்கள் கூறுகையில், "அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி அரசு இடத்தை கைப்பற்ற வேண்டும். அங்கு ரேஷன் கடை, பள்ளி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களைத் திரட்டி, நேரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.

தொடர்புடைய செய்தி