பேராவூரணி தேரோட்டத்தைக் காணக் குவிந்த பொது மக்கள்

65பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் தேரோட்டம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  
பேராவூரணி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த ஏப். 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி பேராவூரணி மற்றும் அதை சுற்றியுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் நீலகண்ட பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருவிழா நாட்களில் தினமும் காமதேனு வாகனம், பூத வாகனம், அன்னவாகனம், மயில்வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. திங்கள்கிழமை அதிகாலை முதல் பால் காவடி, பன்னீர் காவடி, அக்னி காவடி, வேல் காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்தும், தீ மிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 5. 30க்கு நடைபெற்றது முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன், உற்சவர் சுப்பிரமணியர் தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 5. 45 க்கு புறப்பட்டு 6. 30 நிலைக்கு வந்தடைந்தது.

தொடர்புடைய செய்தி