ராகுல் காந்தியின் டிஎன்ஏவை பரிசோதனை செய்க! - எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

84பார்த்தது
ராகுல் காந்தியின் டிஎன்ஏவை பரிசோதனை செய்க! - எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்திக்கு எதிராக இடதுசாரி ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ பி.வி. அன்வர் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அன்வர்,
ராகுல் காந்தியின் டிஎன்ஏவை பரிசோதனை செய்ய வேண்டும். காந்தி என்ற பெயரைச் சேர்த்து நடக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகன் ராகுல் காந்தி. காந்தி பெயரை நீக்கிவிட்டு ராகுல் என்றுதான் அவரை அழைக்க வேண்டும். நிலைமை என்ன, நேரு குடும்பத்தில் இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா? நேரு குடும்பத்தின் மரபணுவில் பிறந்தவர் இப்படியா நடந்து கொள்வார். ராகுல் மோடியின் ஏஜெண்டாக இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என சாடினார்.

தொடர்புடைய செய்தி