சென்னையில் கனமழை பொளந்து கட்டி வருகிறது. இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அதில் குப்பைகள், கழிவுகளும் சேர்ந்து செல்கின்றன. இந்நிலையில் ஓ.எம்.ஆர் சலையில் உள்ள கந்தன்சாவடி பகுதியில் மழைநீரில் பிரிட்ஜ் மிதந்து வந்ததை காணமுடிந்தது.