விருதுநகர்: வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை தோண்டப்பட்ட 18 குழிகளில் சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், மண் குவளைகள், கண்ணாடி பவளங்கள், தீப விளக்குகள், ஆபரணம் உள்ளிட்ட பல கண்டறியப்பட்டுள்ளன. கூடுதலாக தற்போது பொழுதுபோக்கிற்காக பெண்கள் பாண்டி விளையாட்டிற்கு பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. இதன் மூலம் தமிழர்கள் பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.