தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நர்சிங்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெஹிதிபட்டணத்திலிருந்து சங்கர்பள்ளிக்கு அம்மாநில அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில், பயணித்த முதியவர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இறந்தவர் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜன்வாடா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஷெட்டி பாலராஜு (63) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.