உ.பி: காசியாபாத்தில் கேஸ் சிலிண்டர் ஏற்றிச்சென்ற லாரி வெடிச் சிதறிய பரபரப்பு வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி - வசீராபாத் செல்லும் சாலையில் போபுரா சவுக் என்ற இடத்தில் கேஸ் சிலிண்டர்களை லாரி ஏற்றி சென்றது. அப்போது, திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர்கள் வெடித்த சத்தம் பல கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு கேட்டது என தலைமை தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இவ்விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தகவல் வெளிவரவில்லை.