மத்திய பட்ஜெட்டில், உயிர்காக்கும் 36 அத்தியாவசிய மருந்துகளுக்கு வரி விலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வரவேற்றுள்ளார். அவர் கூறியதாவது, “உயிர் காக்கும் மருந்துகள் விலை இல்லாமல் கிடைக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு உயிர்காக்கும் 36 வகையான மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.