கிராம சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா

75பார்த்தது
கிராம சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா
ஓரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
நாம் வாழும் இந்த பூமி பந்தை பாதுகாப்பதற்கு தேவையான பல்வேறு விழிப்புணர்வுகளை ஜூன் 5 தேதி முதல் 12ம் தேதி வரை பள்ளிகளில் ஏற்படுத்திட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
திருமங்கலக்கோட்டை
கீழையூரில் உள்ள அரசு
மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் பொதுமக்களும் இணைந்து பல்வேறு வகையான மரக்கன்றுகளை பள்ளி வளாகத்திலும், கிராமத்தின் சுற்றுப்புறங்ளிலும், நீர் நிலைகளின் அருகிலும் நட்டனர். நீர் நிலைகளை ஏற்கனவே சுத்தம் செய்த இப்பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள குளத்தை சுத்தம் செய்தனர். மேலும் பள்ளி வளாகத்தையும், துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் சுத்தம் செய்தனர். மாணவர்களும், ஆசிரியர்களும் இயற்கையை பாதுகாக்கவும், நெகிழி இல்லா சுத்தமான, சுகாதாரமான கிராமம் அமையவும், விழிபபுணர்வு வாசகங்களை தெருக்களில் முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்றனர். தலைமை ஆசிரியர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பெற்றோர் சங்க தலைவர் தியாக இளங்கோ உலக சுற்றுச்சூழல் தின
பேரணியை துவக்கி வைத்து
மரக்கன்று நட்டு வைத்தார்.
ஆசிரியர்கள் மற்றும் தேசிய
பசுமை படை மாணவர்கள்
கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய பசுமை
படை ஒருங்கிணைப்பாளர்
ஆறுமுகம் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி