நாட்டின் 12 மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஐஎம்டி படி, தென்மேற்கு பருவமழை தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆரம்பித்துள்ளது. மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.