தேசத்தின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரு மனித மனத்தால் இத்தகைய வெட்கக்கேடான பொய்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஆனால் பிரதமரிடமிருந்து இந்த நாடு தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது" என பதிவிட்டுள்ளார். கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, 150 எம்.பி.,க்கள் காரணம் ஏதுமின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.