மாசி மகாமகம் நாளில் டாஸ்மாக் விடுமுறை?

64பார்த்தது
மாசி மகாமகம் நாளில் டாஸ்மாக் விடுமுறை?
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு:

கும்பகோணம் மாசி மகாமக திருவிழா வரும் 24ம் தேதி நடக்கிறது. அன்றைய நாளில் கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்களும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கும்.
இந்தத் திருவிழாவுக்காக தமிழகம் முழுவதும் இருந்து, பல லட்சம் பேர் வருவர். அன்றைய நாளில் கும்பகோணத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது.

கும்பகோணம் நகரிலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார். விஜயகுமார் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிதிகள், "பிப்ரவரி 24ம் தேதி கும்பகோணம் நகர் பகுதியில் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக கலெக்டர் பரிசீலித்து, பிப்ரவரி 22க்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி