பழம்பெரும் நடிகை வைஜயந்தி மாலா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில் அவரது மகன் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து வைஜயந்தி மாலாவின் மகன் சுசிந்திரா பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "டாக்டர் வைஜயந்தி மாலா 91 வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு உள்ளார். பரவி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. இந்த மாதிரி பொய்யான தகவல்களை பகிர்வதற்கு முன்பு சரிபார்த்துக் கொள்ளவும்" என்று பதிவிட்டுள்ளார்